நீண்ட நாட்களுக்கு பிறகு பயன்பாட்டிற்கு வந்த பாலம் - மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய மலை கிராம மக்கள்

ஒசூர் அருகே தென்பெண்ணையாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட உயர்மட்ட மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்ததால், மலைகிராமமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
நீண்ட நாட்களுக்கு பிறகு பயன்பாட்டிற்கு வந்த பாலம் - மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய மலை கிராம மக்கள்
x
* ஒசூர் அருகே தென்பெண்ணையாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட உயர்மட்ட மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்ததால், மலைகிராமமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

* அங்குள்ள ஆழியாளம், போடூர் உள்ளிட்ட மலை கிராமமக்கள் விருப்பமான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றால், உயிரை பணயம் வைத்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம், தென்பெண்ணை ஆற்றை கடந்து சென்று வந்தனர். ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் சமயங்களில் சுமார் 9 கிலோமீட்டர் சுற்றி சென்றனர்

* சிரமத்தை குறைக்க, ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என மலை கிராமமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.  இதனை ஏற்ற அரசு, ஆழியாளம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 2 கோடி ரூபாய் மதிப்பில், உயர்மட்ட பாலம் அமைத்து, மக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிட்டுள்ளது. நீண்டகால கோரிக்கை நிறைவேறியதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர். 




Next Story

மேலும் செய்திகள்