மாயமான காவல் உதவி ஆய்வாளர் - மனைவி போலீசில் புகார்

கொடைக்கானல் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவல் உதவி ஆய்வாளர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாயமான காவல் உதவி ஆய்வாளர் - மனைவி போலீசில் புகார்
x
திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியை சேர்ந்த பாண்டி என்பவர் கொடைக்கானல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 26ம் தேதி திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு செல்வதாக கூறி சென்ற பாண்டி இதுவரை வீட்டுக்கு வரவில்லை. இது குறித்து, அவரது மனைவி மீனாட்சி போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் தனது கணவரை உடனடியாக மீட்டு தருமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து விசாரணை நடத்திய போலீசார், திண்டுக்கல் நீதிமன்ற வாளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பாண்டியின் இருசக்கர வாகனத்தை மீட்டனர். அவருடைய செல்போனும் அதிலேயே இருந்துள்ளது.

இதையடுத்து பாண்டியை தேடும் பணி தொடருகிறது. இந்நிலையில் பாண்டியின் தாயார் இறந்து விட்டார். அந்த செய்தியை கூட பாண்டியிடம் தெரிவிக்க முடியவில்லை என உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்