5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

திருவண்ணாமலை அருகே அரசு பள்ளி மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
x
திருவண்ணாமலை அருகே கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் சுப்பிரமணியன்.இவர் அங்கு படிக்கும் 5ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜேந்திரன் விசாரணை நடத்தினார்.

இதில் தலைமை ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை எனத் தெரிய வந்தது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக தலைமறைவாக உள்ள சுப்பிரமணியனை பணியிடை நீக்கம் செய்து ராஜேந்திரன் உத்தரவிட்டார். முன்னதாக கலசப்பாக்கம் போலீஸில் புகார் அளித்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்