பிளாஸ்டிக் பொருட்கள் இல்லா வாழ்க்கை வாழும் ரேணு நாராயண்

18 ஆண்டுகளாக பிளாஸ்டிக்கை தவிர்த்து வாழ்ந்து வருகிறார் வேணு நாராயணன்
பிளாஸ்டிக் பொருட்கள் இல்லா வாழ்க்கை வாழும் ரேணு நாராயண்
x
பிளாஸ்டிக்கை ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுவரும் நிலையில், பிளாஸ்டிக் இல்லா வாழ்க்கை சாத்தியமா என்பது ஒரு தரப்பினரின் கேள்வியாக உள்ளது. இந்த கேள்விகளுக்கெல்லாம் விடையாக வாழ்ந்து வருகிறார் ஒரு பெண்மணி, இந்த கேள்விகளுக்கு விடையாக மட்டுமல்லாமல் உதாரணமாகவும் வாழ்ந்து வருகிறார்.

இன்று உலக இயற்கை வள பாதுகாப்பு நாள். உலகெங்கும் எஞ்சியுள்ள இயற்கை வளங்களை பாதுகாக்க பல்வேறு நாடுகளும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன... அதன் ஒரு பகுதியாக வரும் 2022 க்குள் ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாக தடை செய்ய இந்தியா தீர்மானித்துள்ளது.

தமிழகமோ வரும் 2019 ஜனவரி ஒன்று முதலே ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய அரசாணை பிறப்பித்துள்ளது.

பிளாஸ்டிக் குறித்து, மேடைதோறும் பிரச்சாரங்கள், சுவரெங்கும் சுவரொட்டிகள், மாணவர்களுக்காக பாடங்கள் என பல வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அதன் தீய வினைகள் நம்மில் பலருக்கு தெரிவதில்லை. அப்படியிருக்க,  18 ஆண்டுகளுக்கு முன்பே பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வோடும்,  தன்னால் இயன்றவரை அதன் பயன்பாட்டை தவிர்த்தும் வருகிறார் ரேணு நாராயண் என்ற பெண்மணி.

பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகள், ஸ்ட்ராக்களுக்கு பதிலாக மூங்கில் உறிஞ்சிகள், பிளாஸ்டிக் ஸ்பூன்களுக்கு பதிலாக மூங்கில் ஸ்பூன்கள் என தான் பயன்படுத்துவது மட்டுமல்லாமல்  தன் குடும்ப உறுப்பினர்கள் உள்பட பலரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் ரேணு. ஆனால் அவரின் முயற்சிகள் பலருக்கு முட்களாகவே தெரிந்துள்ளன.

இத்தனை முயற்சிகளுக்குபின்னரும் தான் எதிர்பார்த்த மாற்றம் ஏதும் வரவில்லை என கூறினாலும், ரேணு நாராயண் தன்முயற்சியில் இருந்து பின்வாங்குவதாய் தெரியவில்லை.

நமது அரசு பிளாஸ்டிக் ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடின்றி வாழ முடியுமா என்ற கேள்வியை முன்வைப்பவர்களுக்கு ரேணு நாராயணே சிறந்த உதாரணம்.






Next Story

மேலும் செய்திகள்