காவிரியை மலர்தூவி, ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்...
பதிவு : ஜூலை 27, 2018, 08:15 AM
வீரசோழன் ஆற்றுக்கு வந்தடைந்த காவிரி நீரை மலர் தூவி, ஆரத்தி எடுத்து உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்...
காவிரியை மலர்தூவி, ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்

மேட்டூரிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர், ஆடுதுறையை அடுத்துள்ள, மணஞ்சேரி தடுப்பணையிலிருந்து வீரசோழன் ஆற்றை வந்தடைந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் காவிரி நீரை, உற்சாகத்துடன் வரவேற்றனர்.

கடைமடை வந்து சேர்ந்த காவிரி - வணங்கி வரவேற்ற பொதுமக்கள்

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர், கடைமடை பகுதியான நாகை மாவட்ட எல்லைக்கு  வந்து சேர்ந்தது. குத்தாலம் அருகே உள்ள திருவாலங்காடு  விக்ரமன்  தலைப்பிற்கு வந்து சேர்ந்த காவிரி நீரை, பொதுப்பணித்துறையினர் மற்றும்  ஏராளமான மக்கள் ஆரத்தி எடுத்து, மலர் தூவி வணங்கி வரவேற்றனர்.

கேக் வெட்டி, இனிப்பு ஊட்டி மக்கள் மகிழ்ச்சி

இதைத் தொடர்ந்து, காவிரி ஆற்றில் இறங்கிய பொதுமக்கள்,  கேக் வெட்டி ஒருவருக்கொருவர் இனிப்புகள் ஊட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனிடையே, காவிரி கடலுடன் கலக்கும் பூம்புகாருக்கு முன்னதாக உள்ள மேலையூர் கடையணைக்கு காவிரி நீர் வந்தபின், ஓரிரு தினங்களில் பாசனத்திற்காக தண்ணீர் பிரித்து அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

579 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

5454 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6414 views

பிற செய்திகள்

ஸ்டாலினுடன் ராஜகண்ணப்பன், ஈஸ்வரன், வேல்முருகன் சந்திப்பு

திமுக தலைவர் ஸ்டாலினை முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் சந்தித்தனர்.

7 views

மக்களவையில் 3வது பெரிய கட்சி எது...?

நாடாளுமன்ற மக்களவையில் 3வது பெரிய கட்சி என்ற பெருமையை திமுக பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

71 views

சி.பா.ஆதித்தனார் 38வது ஆண்டு நினைவு நாள் : சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 38ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

12 views

"தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவனுக்கென்று குணமுண்டு" - கார்த்தி சிதம்பரம்

"தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு" என்பதை நாடாளுமன்றத்தேர்தல் முடிவுகள் காட்டுவதாக சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்ற கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

143 views

தமிழக பா.ஜ.க.வுக்கு சுப்ரமணியன் சுவாமி யோசனை

தமிழகத்தில்வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனித்து நின்றால் வெற்றி நிச்சயம் என அந்த கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி யோசனை தெரிவித்துள்ளார். `

846 views

நீண்ட இரவு... விடியலுக்காக காத்திருந்த திருமா...சிதம்பரத்தில், நள்ளிரவு வரை வெளிவராத வெற்றி நிலவரம்...

சிதம்பரம் மக்களவை தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பெற்ற வெற்றி, அங்குலம் அங்குலமாக சாத்தியமானது.

206 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.