ரூ.2 லட்சம் வைப்புத் தொகை விவகாரம் - தனியார் பள்ளி நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் கைது
பதிவு : ஜூலை 26, 2018, 01:57 PM
10 ஆயிரம் மாணவ, மாணவிகளை தலா 2 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை கட்டச் சொன்ன தனியார் பள்ளி நிர்வாகி மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட 4 பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
சென்னை குரோம்பேட்டை மற்றும் ஆலப்பாக்கத்தில் தனியார் பள்ளியில் படிக்கும் 10 ஆயிரம் மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கு, தலா 2 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை செலுத்தக்கோரி பள்ளி நிர்வாகம் கடிதம் அனுப்பி இருந்தது. வரும் 31 ஆம் தேதிக்குள் பணம் கட்ட முடியாதவர்களுக்கு அடுத்த ஆண்டு மாற்றுச் சான்றிதழ் வழ​ங்கப்படும் என அதில் இடம் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பெற்றோரை பள்ளி நிர்வாகி சந்தானம் உள்ளிட்டோர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளியில் நடந்த காலை கூட்டத்தில், பள்ளி நிர்வாகி சந்தானம் பெற்றோரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பெற்றோர், புனித தாமஸ் மலை துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில், துணை பீர்க்கன்கரணை போலீஸ் நிலையத்தில் வைத்து பள்ளி நிர்வாகி சந்தானத்திடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் பல்வேறு பிரிவுகளின் கீழ் பள்ளி நிர்வாகி சந்தானம் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 


தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

1625 views

பிற செய்திகள்

முருங்கைகாய் விலை கிலோவுக்கு ரூ.15 அதிகரிப்பு

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் காந்தி மார்கெட்டில் முருங்கைகாய் விலை கிலோவுக்கு 15 ரூபாய் வரை அதிகரித்துள்ளது

123 views

480 பருப்பு மூட்டைகளுடன் லாரியை கடத்திய 3 பேர் கைது..!

மதுரையில் ஓட்டுனரை கட்டி போட்டு 480 பருப்பு மூட்டைகளுடன் லாரியை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

109 views

ஊட்டி : தொடர் விடுமுறை எதிரொலி - சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

தொடர் விடுமுறையை ஒட்டி கடந்த 2 நாட்களில் மட்டும் 35 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்தனர்.

30 views

சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோதம்..!

நாமக்கல் மாவட்டம், பவுத்திரம் கிராமம் அச்சப்பன் கோவிலில் சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத நிகழ்ச்சி நடைபெற்றது.

47 views

தோகை விரித்து ஆடிய ஆண் மயில்...

ஈரோட்டில் உள்ள விவசாய தோட்டத்தில் ஆண் மயில் ஒன்று தோகையை விரித்து நடனம் ஆடிய காட்சியை மக்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.

109 views

திருச்சி : இடி, மின்னல் தாக்கி தீ விபத்து..!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே இடி, மின்னல் தாக்கியதில் மாட்டுக்கொட்டகை தீப்பிடித்தது.

200 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.