ரயிலில் பார்சல் அனுப்பப்பட்ட 12 எல்.இ.டி. டி.விகள் திருட்டு - அதிர்ச்சி சம்பவம்

டெல்லியில் இருந்து நெல்லை வந்த திருக்குறள் விரைவு ரயிலில் பார்சலை உடைத்து 12 எல்.இ.டி. டி.வி.க்கள் திருடப்பட்டுள்ளன.
ரயிலில் பார்சல் அனுப்பப்பட்ட 12 எல்.இ.டி. டி.விகள் திருட்டு - அதிர்ச்சி சம்பவம்
x
      டெல்லியில் இருந்து, நெல்லை வந்த திருக்குறள் விரைவு ரயிலில் வந்த பார்சலை உடைத்து 12 எல்.இ.டி. டி.வி.க்கள் திருடப்பட்டுள்ளன. 17 பெட்டிகளில் எல்.இ.டி.விக்கள் பார்சல் அனுப்பப்பட்டுள்ளது.காலை 8 மணிக்கு ரெயில் நெல்லை வந்த போது, எல்.இ.டி.வி-க்கள் திருட்டுப்போனது தெரியவந்தது. 
      இது குறித்து வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீசார்,சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருட்டு போன டி.வி.க்களின் மதிப்பு ஒன்றரை லட்சம் ரூபாய் இருக்கும் என பாதிக்கப்பட்ட வியாபாரி தெரிவித்துள்ளார்.
      ரயிலில் பார்சல் அனுப்பபட்ட டி.வி.க்கள் திருட்டுப்போனது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்