கர்ப்பிணிக்கு உதவிய காவலர்களுக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு

சென்னையில் கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிய காவலர்களை மாநகர காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டினார்.
கர்ப்பிணிக்கு உதவிய காவலர்களுக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு
x
சென்னையில் சில தினங்களுக்கு முன், மின்சார ரயில் நடுவழியில் நின்றபோது, அமுதா என்ற கர்ப்பிணி பெண் இறங்க முடியாமல் 2 மணி நேரம் அவதிப்பட்டார். இதையடுத்து,  காவலர்கள் மணிகண்டன், தனசேகர் ஆகிய இருவரும் குனிந்து நின்று முதுகை படிக்கட்டுகளாக்கி கர்ப்பிணி பெண் இறங்க உதவி செய்தனர். இந்த செய்தி, தந்தி டி.வி.யில் வெளியானது. இதையடுத்து, காவலர்கள் மணிகண்டன், தனசேகர் இருவரையும் பல்வேறு தரப்பினரும் பாராட்டினர். இந்நிலையில், இரண்டு காவலர்களையும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், தனது அலுவலகத்துக்கு அழைத்து பாராட்டு தெரிவித்தார். 

 


நடுவழியில் நின்ற மின்சார ரயில் : 2 மணி நேரமாக தவித்த கர்ப்பிணி பெண்ணை கீழே இறங்க உதவிய காவலர்கள்


Next Story

மேலும் செய்திகள்