திரையரங்கில் முதல் முறையாக இளநீர் விற்பனை...

'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் எதிரொலியாக, நெல்லையில் உள்ள திரையரங்கு ஒன்றில் முதல் முறையாக இளநீர் விற்பனை செய்யப்படுகிறது.
திரையரங்கில் முதல் முறையாக இளநீர் விற்பனை...
x
பாண்டிராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் கடந்த 13ஆம் தேதி கடைக்குட்டி சிங்கம் படம் வெளியானது. விவசாயத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த படம், மக்களிடம் விவசாயம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக, நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரபல திரையரங்கில், இளநீர் விற்பனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நுங்கு உள்ளிட்டவைகளை விற்பனை செய்யவும் திரையரங்கு நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. திரையரங்கின் புதிய முயற்சிக்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் ஆதரவு பெருகிவருகிறது. 



Next Story

மேலும் செய்திகள்