பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை: குற்றத்திற்கான காரணங்கள் - தண்டனை என்ன?

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ள நிலையில், அதற்கான காரணங்கள் மற்றும் தண்டனைகள் குறித்து இத்தொகுப்பில் பாரப்போம்.
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை: குற்றத்திற்கான காரணங்கள் - தண்டனை என்ன?
x
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அண்மை காலமாக அதிகரித்துள்ளன. சென்னையில் 12 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 17 பேரை போலீசார் கைது செய்தனர். 

இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தனிமனித 
ஒழுக்கம் இல்லாததே காரணம் என்றும், அதை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கற்றுத் தரவேண்டும் என்றும் மனநல ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

பாலியல் பலாத்கார  குற்றங்களை தடுக்க ஏற்கனவே சட்டங்கள் உள்ள நிலையில், கடுமையான தண்டனை வழங்க போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு தூக்கு தண்டனை அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட போக்சோ சட்டத்தை கடுமையாக நடைமுறைபடுத்தினால் குற்றங்கள் குறையும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.   





Next Story

மேலும் செய்திகள்