மருமகனை அடித்து உதைத்த மாமனார்...

கோவையில் மகளுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த மருமகனை மாமனாரே அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருமகனை அடித்து உதைத்த மாமனார்...
x
மருமகனை அடித்து உதைத்த மாமனார்... 

கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்த தர்மராஜ் என்பவரின் மகள் சாந்தினிக்கும் பழனிசாமி என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு குழந்தை பிறந்து 3 மாதங்கள் ஆன நிலையில் மனைவியை விட்டு பழனிசாமி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. கணவன் கைவிட்ட நிலையில் சாந்தினி, தந்தையின் வீட்டில் இருந்து குழந்தையை வளர்த்து வந்துள்ளார். அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்த சாந்தினியிடம், அவரது கணவர் பழனிசாமி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.  இதனால் கோபமடைந்த சாந்தினியின் தந்தை தர்மராஜ், தனது மருமகனை அடித்து உதைத்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Next Story

மேலும் செய்திகள்