தனியார் காவலாளி சேவை நிறுவன விதிமுறைகள்...

தனியார் காவலாளி சேவை நிறுவனங்களில் காவல்துறையின் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என கேள்வி எழுந்துள்ளது.
தனியார் காவலாளி சேவை நிறுவன விதிமுறைகள்...
x
தனியார் காவலாளி சேவை நிறுவன விதிமுறைகள்...

சென்னை போன்ற மாநகரங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் தனியார் காவலாளி சேவை நிறுவனங்கள் மூலம் காவலாளிகள் பணி அமர்த்தப்படுகிறார்கள். அவ்வாறு நியமிக்கப்படும் காவலாளிகள் எப்படி இருக்க வேண்டும், பணிகளில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்பது பற்றி காவல்துறை விதிமுறைகளை வரையறுத்துள்ளது. அதன்படி,  காவலாளி வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர் 18 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். அவரது முகவரி, பாஸ்போர்ட், ஸ்மாட்கார்ட் உள்ளிட்டவற்றின் உண்மைத்தன்மையை அவரை பணிக்கு அமர்த்தும் தனியார் நிறுவனம் பரிசோதிக்க வேண்டும். தேர்வான நபர், காவல்துறையிடம் இருந்து மட்டுமே நன்னடத்தை சான்று பெற்றிருக்க வேண்டும். Card-6 அந்த சான்றிதழை 3 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். பணியில் சேர்ந்த பிறகு, தனியார் நிறுவன முகவரியுடன் கூடிய அடையாள அட்டை, சீருடை, பேஜ் போன்றவற்றை பணியில் இருக்கும் போது அணிந்திருக்க வேண்டும். பேரிடர் நெருக்கடி நிலை, பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கருவிகளை கையாளவும் அவருக்கு தெரிந்திருக்க வேண்டும். 

அடிப்படை சட்டங்கள்  குறித்த புரிதல் பணியில் சேரும் நபருக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும். விதிமுறைகளை மீறும் நபரின் மீது சட்டம் 1973 ன் 39-வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை விதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த விதிமுறைகளை தனியார் காவலாளி சேவை நிறுவனங்கள் முறையாக பின்பற்றுகிறதா என்ற கேள்வியை அயனாவரம் சம்பவம் எழுப்பியுள்ளது. இந்நிலையில் விதிமுறைகளை தனியார் செக்யூரிட்டி நிறுவனங்கள் கடுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க காவல்துறை திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. கூடவே அடுக்குமாடி குடியிருப்புகள், மற்றும் தனியார் வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டிருக்கும் தனியார் செக்யூரிட்டிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் காவல்துறை திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. 




Next Story

மேலும் செய்திகள்