மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து சம்பவம் எதிரொலி - மாற்று இடம் ஒதுக்கும் வரை கடைகளை திறக்க நீதிமன்றம் அனுமதி

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில், 5 மாதங்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டன.
மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து சம்பவம் எதிரொலி - மாற்று இடம் ஒதுக்கும் வரை கடைகளை திறக்க நீதிமன்றம் அனுமதி
x
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கடந்த பிப்ரவரி மாதம், கிழக்கு கோபுரம் பகுதியில் உள்ள  கடைகளில் ஏற்பட்ட தீ விபத்திற்குப் பிறகு, அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன. இந்நிலையில், கோவில் நிர்வாகம் மாற்று இடம் ஒதுக்கும் வரை, கடைகளை திறக்க அனுமதி கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், கடை வியாபாரிகள் மனு அளித்தனர்.

இதன் அடிப்படையில், 51 கடைகளை திறக்க, அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று 10 கடைகளும், இன்று  41 கடைகளும் திறக்கப்பட்டன. இதேபோல், கோயிலுக்கு வெளியே உள்ள புதுமண்டபத்தில் மூடப்பட்ட 300 கடைகளும் கோயில் நிர்வாகத்தின் அனுமதியோடு இன்று மீண்டும் திறக்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்