குற்றவாளிகளுக்கு அடி, உதை - நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
சென்னையில் சிறுமி பாலியல் வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"குற்றவாளிகளுக்கு அடி, உதை"
சென்னையில் சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்ட வழக்கில் கைதான குற்றவாளிகள் 17 பேரும் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து அவர்களை வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி மஞ்சுளா உத்தரவிட்டார். விசாரணை முடிந்து 17 பேரும் வெளியே வந்த போது அங்கிருந்தவர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் பலத்த பாதுகாப்புடன் புழல் சிறைக்கு கொண்டு சென்றனர்.
Next Story

