90 ஆண்டுகளை கடந்தும் உறுதியுடன் உள்ள நாட்டாமை கட்டடம் - புனரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

90 ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் கட்டப்பட்ட நாட்டாமை கட்டடத்தை, பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
90 ஆண்டுகளை கடந்தும் உறுதியுடன் உள்ள நாட்டாமை கட்டடம் - புனரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
x
"வரலாற்று சிறப்புமிக்க நினைவு சின்னங்கள்"

சேலத்தில் 90 ஆண்டுகளுக்கு முன்பு  ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட நாட்டாமை கட்டடத்தில், தற்போது மாவட்ட ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்தோ-சரசெனிக் கலைநயத்துடன் கட்டடப்பட்ட இந்த கட்டடம் எந்தவொரு பாதிப்பும் இன்றி இன்றும் கம்பீரமாக காட்சி அளித்து வருகிறது. இந்த வளாகத்தில் உள்ள இரண்டு கட்டடங்கள் 1927 ஆம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டது என்றும், அப்போதைய சென்னை மாகாண ஆளுநர் கோசேன் இதனை திறந்து வைத்தார் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இங்குள்ள மகிழம் பூ மரம், வயது அடிப்படையில், தமிழகத்தின் மூத்த மரங்கள் பட்டியலில் முதல் மூன்று இடத்தில் உள்ளது. சேலம் மாநகர் மற்றும் சுற்றுப் பகுதியில், உள்ள வரலாற்று சிறப்புமிக்க பல கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ள  சமூக ஆர்வலர்கள்,  நாட்டாமை கட்டடத்தை அதன் பழமை மாறாமல் அழகுற புனரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.Next Story

மேலும் செய்திகள்