தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: "மாவட்ட ஆட்சியர் எங்கே இருந்தார்..? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்த போது, மாவட்ட ஆட்சியர் எங்கே போய் இருந்தார் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: மாவட்ட ஆட்சியர் எங்கே இருந்தார்..? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
x
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக 15 க்கும் மேற்பட்ட வழக்குகள், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. உள்துறை செயலாளர், தலைமை செயலாளர், டிஜிபி ஆகிய மூவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் சி.டி செல்வம் மற்றும் ரஷீத் அகமது முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, எந்த வகையான துப்பாக்கிகள்,  தூத்துக்குடி சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டன என  நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். மேலும், 99 நாட்கள் நடந்த போராட்டத்தின் வீடியோ காட்சிகள் மற்றும் 99 நாள் உளவுத்துறை அறிக்கை ஆகியவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். பின்னர், வழக்கு விசாரணையை வருகிற 18 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்