மீன்களை பதப்படுத்த அவசியம் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் தேவையை காட்டிலும் மீன் வரத்து குறைவாக இருப்பதால், மீன்களை பதப்படுத்துவதற்கான அவசியம் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மீன்களை பதப்படுத்த அவசியம் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்
x
"மீன்களை பதப்படுத்த அவசியம் இல்லை "

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத் துறை இயக்குனர் அலுவலகத்தில், அதிகாரிகளுடன் அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மீன்களில் ரசாயனம் கலக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து பதிலளித்தார். தமிழகத்தில் தேவையை காட்டிலும் மீன் வரத்து குறைவாக இருப்பதால், மீன்களை பதப்படுத்துவதற்கான அவசியம் இல்லை என்றார். சமூக விரோதிகளால் திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுவதாக குற்றம் சாட்டிய அவர், இது குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார்.

மீன்களில் ரசாயனம் கலப்பதாக புகார் - சென்னையில் அதிகாரிகள் 2-வது நாளாக ஆய்வு 

இதற்கிடையே, மீன்களில் ரசாயனம் கலப்பதாக எழுந்த புகாரையடுத்து சென்னை காசிமேட்டில் அதிகாரிகள்
இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்டனர்.  

சென்னை சைதாப்பேட்டை , சிந்தாதரிப்பேட்டை, மார்க்கெட் பகுதிகளில் விற்கப்படும் மீன்களில் ரசாயனம் கலப்பதாக எழுந்த புகாரையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.  மீன்களில் ரசாயனம் எதுவும் இல்லை என்றும், தரமாக உள்ளதாகவும் அதிகாரிகள் அறிக்கை அளித்தனர். இதையடுத்து காசிமேட்டில் இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், விசைப்படகில் பிடித்து வரப்படும் மீன்கள், வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படும் வஞ்சிரம் உள்ளிட்ட மீன்களை ஆய்வுக்காக கொண்டு சென்றனர். மீன் ஏற்றுமதி கிடங்குகளில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



Next Story

மேலும் செய்திகள்