தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் - சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு

2வாரத்திற்குள் புதிய பட்டியலை வெளியிடுக
தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் - சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு
x
நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 


* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ரங்கராஜன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

* நீட் தேர்வு தமிழ் வினாத்தாள், சரியாக மொழியாக்கம் செய்யப்படாத 49 வினாக்களுக்கு ஒவ்வொன்றுக்கும் 4 மதிப்பெண் என 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார். 

* இந்த விவகாரத்தில் சிபிஎஸ்இ சர்வாதிகார போக்குடன் செயல்படுவதாக ஏற்கனவே, உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம் தெரிவித்திருந்தது. 

* இந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 


* அதில், நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் எனவும் 

* 2 வாரத்திற்குள் புதிய பட்டியலை வெளியிடவும் சிபிஎஸ்இக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

* அதுவரை, தற்போது தமிழகத்தில் நடக்கும் மருத்துவ கலந்தாய்வை நிறுத்தி வைக்குமாறும் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. 

* இந்த தீர்ப்பை எதிர்த்து நாளையே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சிபிஎஸ்இ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்