திருச்சி: விவசாயத்தில் புதுமையை உருவாக்கிய விவசாயி

அதிக மகசூல் தரும் வகையில் திருச்சியை சேர்ந்த விவசாயி ஒருவர் கேப்சூல் வடிவிலான விதை நெல்லை உருவாக்கி உள்ளார்.
திருச்சி: விவசாயத்தில் புதுமையை உருவாக்கிய விவசாயி
x
திருச்சி ஸ்ரீரங்கம் அருகே உள்ள சிறுகமணி காவல்கார பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி வெங்கடேஸ்வரன். இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். 

தண்ணீர் பொய்த்துப் போன நாட்களில் வயலில் விதைத்த நெல் முளைத்து வருவதற்கான சாத்தியம் குறைவானதாகவே இருக்கும். ஆனால் அதற்கு மாற்றாக கேப்ஸ்யூலுக்குள் விதை நெல்லை வைத்து வயலில் விதைத்து விடுகிறார். 

2 விதை நெல், வேப்பம் புண்ணாக்கு பொடி மற்றும் போதுமான சத்துகளை எல்லாம் ஒரு கேப்ஸ்யூலுக்குள் அடைத்து வயலில் விதைத்து விடுவதால் அந்த விதை ஊட்டமாக வளரும் என்கிறார் விவசாயி வெங்கடேஸ்வரன். 

"நாற்றில்லா நடவு முறையால் விதைகள் தரமாக முளைத்து வரும்"

இந்த முறையால் முளைத்து வரும் நாற்றுகளை மீண்டும் பறித்து நட வேண்டும் என்ற அவசியமில்லை. முறையான இடைவெளியில் சரியான வளர்ச்சியுடன் இந்த விதைகள் வளரும் என்பதால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்கிறார் இவர். 

இவர் கண்டுபிடித்த இந்த கேப்ஸ்யூல் விதை நெல், சிறந்த கண்டுபிடிப்பாக அங்கீகரிக்கப்பட்டு அதற்கான விருதையும் பெற்றுள்ளது. 

"இந்த முறையால் தரமான விதை நெல் கிடைக்கும்"

மண்ணின் தன்மையை மேம்படுத்தி போதிய சத்துகளை கொடுத்து விளைச்சலை அதிகரிக்கும் இந்த கேப்ஸ்யூல் முறையால் விவசாயம் செழிக்கும் என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது. 

Next Story

மேலும் செய்திகள்