2016 டிச.4 ந் தேதி ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது - அப்பல்லோ மருத்துவர் ரமா வாக்குமூலம்

அப்பல்லோ மருத்துவ மனையில் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது தொடர்ந்து 40 நிமிடங்கள் சிகிச்சை அளித்து காப்பாற்ற முயற்சித்ததாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மருத்துவர் ரமா வாக்குமூலம் அளித்துள்ளார்
2016 டிச.4 ந் தேதி ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது - அப்பல்லோ மருத்துவர் ரமா வாக்குமூலம்
x
"ஜெயலலிதாவை பார்த்து பயப்பட வேண்டாம் என சைகை காட்டினார் சசிகலா" 

அப்பல்லோ மருத்துவ மனையில் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது தொடர்ந்து 40 நிமிடங்கள் சிகிச்சை அளித்து காப்பாற்ற முயற்சித்ததாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மருத்துவர் ரமா வாக்குமூலம் அளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் அரவிந்தன், கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி, மாலை நான்கரை மணியளவில், ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அப்போது மருத்துவர் ரமா பணியில் இருந்ததாகவும் கூறினார். மூத்த மருத்துவர் ரமேஷ் உடன் இணைந்து, இதய அறுவை சிகிச்சை அடிப்படையில், இதயத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர முயற்சித்ததாக ஆணையத்தில் ரமா வாக்குமூலம் அளித்துள்ளார். மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்த்து பயப்பட வேண்டாம் என சைகை காட்டினார் சசிகலா என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் அரவிந்தன் கூறியுள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்