ஐபிஎல் அட்டவணை வெளியீடு - முதல் போட்டியில் சென்னை - மும்பை மோதல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள 13ஆவது ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
x
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள 13ஆவது ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 19ஆம் தேதி அபுதாபியில் தொடங்கும் முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி மதியம் 3.30 மணி மற்றும் மாலை 7.30 மணிக்கு போட்டிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர்19ஆம் தேதி முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை மொத்தம் 56 லீக் போட்டிகள் நடப்பு தொடரில் நடைபெற உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்