மகளிருக்கான உலகக் கோப்பை டி-20 போட்டி - அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி தகுதி

மகளிருக்கான உலகக் கோப்பை இருபது ஓவர் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
மகளிருக்கான உலகக் கோப்பை டி-20 போட்டி - அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி தகுதி
x
இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதிய லீக் ஆட்டம் மெல்போர்னில் நடைபெற்றது.  இதில்  டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய வீராங்கனை Shafali verma 46 ரன்களும், டனியா பாட்டியா 23 ரன்களும் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களை எடுத்தது. 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி வீராங்கனைகளும் முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் நியூசிலாந்து அணி 3 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, அரையிறுதிக்கு முன்னேறியது. 

Next Story

மேலும் செய்திகள்