31 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா ஒயிட் வாஷ் - விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறிய பும்ரா

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை நியூசிலாந்து அணி முழுமையாக கைப்பற்றியுள்ளது.
31 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா ஒயிட் வாஷ் - விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறிய பும்ரா
x
TAURANGA-வில் நடைபெற்ற 3வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரார் அகர்வால் 1 ரன்னிலும்,  கோலி 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பிரித்வி ஷா 40 ரன்களுக்கு ஆட்டமிழந்த பின், ஸ்ரேயாஸ் ஐயர் - ராகுல் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் சேர்தது. அதிகபட்சமாக ராகுல் 112 ரன்களும், ஸ்ரேயாஸ் 62 ரன்களும் விளாசினர். 297 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். இறுதியில் லதாம் , காலின் டி கிராண்ட்ஹோம் நேர்த்தியாக ஆடி அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தனர். 47 புள்ளி 1 ஒவரில் அந்த அணி 300 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது..  இந்த வெற்றியின் மூலம் ஒரு நாள் தொடரை 3க்கு பூஜ்ஜியம்  என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. தொடரை இழந்தது மட்டுமின்றி 31 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா ஒயிட் வாஷ் செய்யப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஒரு நாள் தொடரில் , விக்கெட் வீழ்த்தாதது இதுவே முதல்முறை.. கேப்டன் கோலி கடந்த 3 ஒரு நாள் தொடர்களிலும் , சதம் விளாசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்