ஐஎஸ்எல் கால்பந்து தொடர் - பெங்களூர் அணி முதல் தோல்வி
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் மும்பை அணி 3க்கு 2 என்ற கோல் கணக்கில் பெங்களூர் அணியை வீழ்த்தியது.
பெங்களூரில் நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை - பெங்களூரு அணிகள் பலப்பரிட்சை நடத்தின. ஆட்டத்தின் முதல் பாதியில் மும்பை அணி ஒரு கோல் அடித்து முன்னிலையில் இருந்தது. அதன் பின் விறுவிறுப்பான இரண்டாம் பாதியில் பெங்களூர் 2 கோல்களும் , மும்பை அணி 1 கோலும் அடித்ததால் போட்டி சமனில் முடியும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கூடுதல் நேரத்தில் மும்பை வீரர் போர்ஜஸ் கோல் அடித்து மைதானத்தில் குழுமியிருந்த பெங்களூர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
Next Story

