இந்தியா VS தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் : ரோகித் சர்மா சதம் - மயங்க் அகர்வால் அரை சதம்

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை வெளிப்படுத்தியது.
இந்தியா VS தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் : ரோகித் சர்மா சதம்  - மயங்க் அகர்வால் அரை சதம்
x
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை வெளிப்படுத்தியது.  விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய மயங்க் அகர்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் அரைசதம் கடந்தனர். இந்நிலையில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. முதல் நாள் ஆட்டம் அத்துடன் முடிவு பெற்றதாக நடுவர்கள் அறிவித்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். 59.1 ஓவர் முடிவில், ரோகித் சர்மா 115 ரன்களும் மயங்க அகர்வால் 84 ரன்களும் எடுத்திருந்தனர்.Next Story

மேலும் செய்திகள்