20 ஓவர் கிரிக்கெட் போட்டி : தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தர்மசாலா வருகை

இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்க, தென் ஆப்பிரிக்க அணி, தர்மசாலா வந்துள்ளது.
20 ஓவர் கிரிக்கெட் போட்டி : தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தர்மசாலா வருகை
x
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் 3 டெஸ்ட் போட்டிகளிலும் மோதுகிறது. முதல் 20 ஓவர் போட்டியில் பங்கேற்க, தென் ஆப்பிரிக்க அணி, இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலா வந்துள்ளது. போட்டி நடைபெறும் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க வீரர்கள், வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும், போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி, செப்டம்பர் 15 - ல் தர்மசாலாவிலும், செப்டம்பர் 18 - ல் மொகாலியிலும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெறும்.

செப்டம்பர் 22 - பெங்களூருவில், 3 வது இறுதி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெறும். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரை, அக்டோபர் 2 ம்தேதி முதல்- 6ம் தேதி வரை - விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. 2- வது டெஸ்ட் போட்டி, அக்டோபர் 10 ம் தேதி முதல் 14  ம் தேதி வரை- புனேவிலும், 3- வது டெஸ்ட் போட்டி, அக். 19 ம் தேதி முதல் 23ம் தேதி வரை ராஞ்சியிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த போட்டிக்கான ஏற்பாடுகள், முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்