டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் : சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஹாட்ரிக் வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் : சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஹாட்ரிக் வெற்றி
x
முதலில் விளையாடிய கோவை கிங்ஸ் அணி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.இறுதியாக கோவை கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9  விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் ஹரிஷ் குமார் 4 விக்கெட்டுகளும் , முருகன் அஷ்வின் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்கள் அதிடியாக விளையாடி 116 ரன்கள் இலக்கை  13 புள்ளி 3 ஓவர்களில் துரத்தினர். இதன் மூலம் சேப்பாக் அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.

Next Story

மேலும் செய்திகள்