உலக கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியா Vs இலங்கை - ஆஸ்திரேலியா அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
உலக கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியா Vs இலங்கை - ஆஸ்திரேலியா அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
x
உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 334 ரன்களை எடுத்தது. அபாரமாக ஆடிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் 153 ரன்கள் விளாசினார். இதனையடுத்து 335 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய கருணாரத்னே மற்றும் குசல் பெரேரா இலங்கை அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தனர். பின்னர் வந்த பேட்ஸ்மன்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் இலங்கை அணி 45 புள்ளி 5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 247 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்