நியூசி.க்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி : இந்திய அணி படுதோல்வி

நியூசிலாந்துக்கு எதிரான 4ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 92 ரன்களில் சுருண்டு படுதோல்வியை தழுவியது.
நியூசி.க்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி : இந்திய அணி படுதோல்வி
x
நியூசிலாந்துக்கு எதிரான 4ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 92 ரன்களில் சுருண்டு படுதோல்வியை தழுவியது. ஹாமில்டனில், நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே, விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முடிவில், 92 ரன்கள் எடுத்த நிலையில் 30 புள்ளி 5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக சாஹல் 18 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து வீரர் பவுல்ட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இது இந்திய அணியின் 7வது குறைந்தபட்ச ஸ்கோராகும். 

Next Story

மேலும் செய்திகள்