நியூசி.க்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி : இந்தியாவுக்கு 244 ரன்கள் வெற்றி இலக்கு

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற, இந்திய அணிக்கு 244 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நியூசி.க்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி : இந்தியாவுக்கு 244 ரன்கள் வெற்றி இலக்கு
x
MOUNT MAUNGANI நகரில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் முன்ரோ, குப்தில் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் வில்லியம்சன் 28 ரன்களில் வெளியேறினார். சரிவிலிருந்து அணியை டைலர், டாம் லாத்தம் ஜோடி பொறுப்புடன் விளையாடி மீட்டது. சிறப்பாக விளையாடிய டைலர் 93 ரன்களிலும், லாத்தம் 51 ரன்களிலும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப, பின்வரிசை வீரர்களும் ஏமாற்றினர். இதனால் நியூசிலாந்து அணி 49வது ஓவரில் 243 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய வீரர் முகமது ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடரை கைப்பற்ற இந்தியா தீவிரம்

244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி கிளமிறங்கியது. தொடக்க வீரர்கள் தவான் 28 ரன்களில் தனது விக்கெட்டை பறிக்கொடுக்க,ரோஹித் சர்மா அரைசதம் விளாசினார். சற்று முன்பு வரை இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்