இந்தியா vs ஆஸி. 2 வது ஒருநாள் போட்டி : பதிலடி கொடுக்குமா இந்தியா?
பதிவு : ஜனவரி 15, 2019, 01:10 PM
இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஷான் மார்ஷின் அபார ச‌த‌த்தால் ஆஸ்திரேலிய அணி 298 ரன்கள் குவித்துள்ளது.
இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஷான் மார்ஷின் அபார ச‌த‌த்தால் ஆஸ்திரேலிய அணி 298 ரன்கள் குவித்துள்ளது. அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்த போட்டியில்,  டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. அதன்படி களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில், சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை சரிந்து வந்தன. ஆனால் ஒருபுறம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷான் மார்ஷ் 131 ரன்கள் குவித்து அந்த அணிக்கு வலு சேர்த்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 298 ரன்கள் குவித்துள்ளது. 

தொடர்ந்து 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், இந்திய அணி தனது பேட்டங்கை தொடங்கவுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில், முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. எனவே இந்த போட்டியில் ஜெயித்தால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும் என்பதால், இந்திய அணி வீர‌ர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதே சமயம் டெஸ்ட் போட்டியில் உள்ளூர் ரசிகர்களை ஏமாற்றிய விரக்தியில் உள்ள ஆஸ்திரேலிய அணியும் ஒருநாள் தொடரை கைப்பற்ற போராடி வருவதால் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. 


தொடர்புடைய செய்திகள்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் : புதிய உச்சம் தொட்ட ரிஷப் பண்ட்

சர்வதேச டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் புஜாரா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

499 views

பிற செய்திகள்

உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் தோல்வி

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது.முன்னதாக பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

167 views

51 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றார் மேரி கோம்

கவுகாத்தியில் நடைபெற்ற இந்திய ஓபன் குத்துச் சண்டை போட்டியில் இந்திய வீரர்கள் 57 பதக்கங்களை கைப்பற்றி அசத்தியுள்ளனர்.

16 views

இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் காயம் : உலக கோப்பை தொடரில் இருந்து விலகல்?

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பங்கேற்பது கேள்விக்குறி ஆகியுள்ளது.

9 views

விடா முயற்சியில் பென் ஸ்டோக்ஸ் : பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும் வீடியோ

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் புதுவிதமான கிரிக்கெட் பயிற்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.

555 views

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து புறப்பட்டது இந்திய அணி

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கிறது.

93 views

36வது தேசிய கூடைப்பந்து இறுதிப்போட்டி : பெண்கள் பிரிவில் கேரள அணி வெற்றி

கோவையில் நடைபெற்ற 36வது தேசிய கூடைப்பந்து இறுதிப்போட்டியில், பெண்கள் பிரிவில் கேரள அணி கோப்பையை கைப்பற்றியது.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.