ஆஸி. ஓபன் டென்னிஸ் நாளை தொடக்கம்

நடப்பாண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நாளை தொடங்குகிறது.
ஆஸி. ஓபன் டென்னிஸ் நாளை தொடக்கம்
x
மெல்போர்னில் இந்திய நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு போட்டிகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் களமிறங்குகிறார். பெடரருக்கு, 6 முறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்ற ஜோகோவிச், கடும் சவால் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது கடைசி தொடரில் விளையாடும் ஆண்டி முர்ரே மற்றும் காயத்திலிருந்து திரும்பியுள்ள நடாலும், தங்களது தடத்தை பதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றன. மகளிர் பிரிவில் செரினா வில்லியம்ஸ், ஹாலேப், நடப்பு சாம்பியன் வொஸ்னியாக்கி, மரியா ஷரபோவா ஆகியோர் களமிறங்குகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்