ஆஸி.க்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் - வலுவான நிலையில் இந்திய அணி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.
ஆஸி.க்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் - வலுவான நிலையில் இந்திய அணி
x
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. மெல்போர்னில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் என்ற ஸ்கோருடன் மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. இந்திய வீரர் பும்ராவின் அனல் பறக்கும் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக கேப்டன் டிம் பெய்ன் 22 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலிய அணி 151 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

292 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, ஃபாலோ ஆன் வழங்காமல் 2வது இன்னிங்சில் களமிறங்கியது.  இந்திய அணி வீரர்களும் பேட்டிங் செய்ய முடியாமல் திணறினர். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள்
எடுத்துள்ளது. இது ஆஸ்திரேலிய அணியை விட 346 ரன்கள் கூடுதலாகும். இன்னும் 2 நாள் எஞ்சிய நிலையில், இந்தியாவின் வெற்றி பிரகாசமாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்