இந்தியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் : 326 ரன்களுக்கு ஆஸி ஆல் அவுட்

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நிதானமாக விளையாடி வருகிறது.
இந்தியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் : 326 ரன்களுக்கு ஆஸி ஆல் அவுட்
x
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நிதானமாக விளையாடி வருகிறது. பெர்த்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்த‌து. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்கார‌ர்கள் FINCH ஹாரிஸ் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 112 ரன்களை சேர்த்தனர். FINCH 50 ரன்களிலும், ஹாரிஸ் 70 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். உஸ்மான் கவாஜா, HANDSCOMB ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேற, TRAVIS HEAD 58 ரன்களில் பவிலியன் திரும்பினார். இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் இஷாந்த் சர்மா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்