முதல் டெஸ்ட் கிரிக்கெட் - இந்தியா வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றது.
அடிலெய்டில் கடந்த 6ஆம் தொடங்கிய இந்தப் போட்டியில், முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் முறையே 250 மற்றும் 307 ரன்களை இந்திய அணி எடுத்திருந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 235 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. இதையடுத்து அந்த அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 291 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா, வெற்றி வாகை சூடியது. இந்திய அணியின் பும்ரா, ஷமி, அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 10 ஆண்டுகளுக்கு பிறகு, ஆஸ்திரேலியாவில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
Next Story