ஆசிய விளையாட்டு போட்டி - இந்தியாவுக்கு பதக்கம் உறுதி

ஆசிய விளையாட்டு போட்டி
ஆசிய விளையாட்டு போட்டி - இந்தியாவுக்கு பதக்கம் உறுதி
x
ஆசிய விளையாட்டு போட்டி டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவு- இந்தியாவுக்கு பதக்கம் உறுதி

ஆசிய போட்டி டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா ஜோடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தது. அரையிறுதியில் ஜப்பான் இணையை எதிர்கொண்ட ரோகன் போபண்ணா, சரண் ஜோடி 4க்கு6,6க்கு3,10க்கு8 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதன் மூலம் தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் இந்தியாவுக்கு உறுதியாகியுள்ளது. 


ஆசிய போட்டி மகளிர் கபடி இறுதிச் சுற்றுக்கு இந்தியா தகுதி

ஆசிய போட்டி மகளிர் கபடி போட்டியின் இறுதிச் சுற்றுக்கு நடப்பு சாம்பியனான இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. அரையிறுதியில் சீன தைபே அணியை எதிர்கொண்ட இந்தியா 27க்கு14 என்ற புள்ளிகள் கணக்கில் எளிதில் வென்றது. 

ஆசிய விளையாட்டு போட்டிகள்  மகளிர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் - இந்தியாவுக்கு வெண்கலம்

ஆசிய விளையாட்டு தொடரின், மகளிர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியில், இந்திய வீராங்கனை அங்கிதா ரைனா, வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார். அரையிறுதியில் சீனாவின் ஷங் ஷுவாவை 
எதிர்த்து விளையாடிய அங்கிதா, 4க்கு 6, 6க்கு 7 என்ற புள்ளி கணக்கில் தோல்வியை தழுவினார்.

ஆசிய விளையாட்டு போட்டி - பேட்மிண்டன் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முன்னேற்றம்


ஆசிய போட்டி பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார்.  வியட்நாம் வீராங்கனை டிராங்கை எதிர்கொண்ட சிந்து, 21க்கு10, 12க்கு21,  23க்கு21 என்ற செட்களில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 

பேட்மிண்டன் - அஸ்வினி ஜோடி முன்னேற்றம்

இதே போன்று மகளிர் இரட்டையர் பேட்மிண்டன்  பிரிவின் காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு இந்திய ஜோடி அஸ்வினி போண்ணப்பா, சிக்கி ரெட்டி ஜோடி தகுதி பெற்றுள்ளது. ஹாங்காங் ஜோடியை 21க்கு16, 21க்கு15 என்ற நேர் செட் கணக்கில் அஸ்வினி 
ஜோடி வீழ்த்தியது. 

Next Story

மேலும் செய்திகள்