இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்- வெற்றி வாய்ப்பு குறித்து கேப்டன் கோலி கருத்து

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்,நம்பிக்கையுடன் களமிறங்கி திறமையை வெளிப்படுத்துவோம் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்- வெற்றி வாய்ப்பு குறித்து கேப்டன் கோலி கருத்து
x
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், நம்பிக்கையுடன் களமிறங்கி திறமையை வெளிப்படுத்துவோம் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்தார். பிர்மிங்காமில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய அணி கடந்த 2 ஆண்டுகளாக வெளிநாடுகளில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். 

பந்துவீச்சாளர்கள் எவ்வாறு பார்டனர்ஷிப் அமைத்து விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்பதை நன்கு அறிந்துள்ளதாகவும் கோலி கூறினார். 

கடந்த முறை இங்கிலாந்து மண்ணில் சோபிக்க முடியாதது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இம்முறை நல்ல மனநிலை மற்றும் உறுதியுடன் இருப்பதால் ரன் குவிக்க முடியும் என்று விராட் கோலி பதில் அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்