இலங்கை சென்றார் அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 4 நாள் சுற்றுப் பயணமாக இலங்கை சென்றுள்ளார்.
x
இலங்கை சென்றார் அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 4 நாள் சுற்றுப் பயணமாக இலங்கை சென்றுள்ளார்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடிகள் நிலவி வரும் சூழலில், தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக நாள்தோறும் வரும் செய்திகளை அடுத்து 4 நாள் பயணமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று இலங்கை புறப்பட்டார்.

இரவு 1 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கொழும்பு சென்ற அவர், அங்கிருந்து இலங்கை தமிழர்கள் அதிகம் வசிக்க கூடிய மலையக பகுதிக்கு சென்று தேயிலை தோட்டங்களில் வேலை பார்க்கும் மக்களை சந்திக்க உள்ளார்.

தொடர்ந்து யாழ்பாணம் செல்லும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்திய அரசின் சார்பில் கட்டப்பட்டுள்ள சுமார் 10 ஆயிரம் வீடுகளை பார்வையிட்டு அடுத்த கட்ட வளர்ச்சி பணிகள் குறித்து தமிழர்களிடையே உரையாற்ற உள்ளார்.

இந்த பயணம் முடிந்து வரும் 4ம் தேதி அவர் தமிழகம் திரும்ப உள்ள நிலையில், அவரது இப்பயணம் ரகசியமாக வைக்கப்பட்டு இருப்பது அரசியல் களத்தில் பெரியளவில் கேள்விகளை எழுப்பியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்