"சார்பட்டா" திரைப்படம் - பா.ரஞ்சித்துக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

"சார்பட்டா" திரைப்படம் - பா.ரஞ்சித்துக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்
சார்பட்டா திரைப்படம் - பா.ரஞ்சித்துக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்
x
"சார்பட்டா" திரைப்படம் - பா.ரஞ்சித்துக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் 

விளையாட்டு துறைக்கு எம்.ஜி.ஆர் எதுவும் செய்யவில்லை என்பது போல சார்பட்டா திரைப்படம் இருப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 30 ஆண்டு கால நல் ஆட்சியை திட்டமிட்டு இயக்குனர் பா. ரஞ்சித் மறைத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.சார்பட்டா திரைப்படம், எம்ஜிஆருக்கும் விளையாட்டு துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இத்திரைப்படம் முழுக்க முழுக்க திமுகவின் பிரச்சாரப் படமாகவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். திரையில் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த எம்ஜிஆர் முதலமைச்சரான பிறகு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் எண்ணற்ற சலுகைகள் வழங்கினார்.ஆனால் சார்பட்டா திரைப்படம் திமுக ஆட்சியில் மட்டுமே விளையாட்டு வீரர்கள், மதிக்கப்பட்டது போலவும் அவர்களை எம்.ஜி.ஆர் கைகழுவியது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். கலை என்பது வரலாற்றை விட கூர்மையானது. உண்மைகள் மறைக்கப்படுவது வருங்கால தலைமுறைக்கே செய்யும் துரோகம் என்றும்,எம்ஜிஆர் படங்களில் விளையாட்டு வீரராக ஏற்றுவரும் கதாபாத்திரங்கள் தன்னை போன்ற எண்ணற்றோருக்கு வீர விளையாட்டுகளின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியதாகவும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.எத்தனையோ வீரர்களை ஊக்குவித்த எம்ஜிஆரை சார்பட்டா படத்தில் தவறாக சித்தரித்துள்ளது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும், இதை வன்மையாக கண்டிப்பதாகவும் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்