விவசாயிகளுக்கு ஆதரவாக 18ம் தேதி உண்ணாவிரதம் - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அறிவிப்பு

டெல்லி போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 18-ம் தேதி உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெறும் என்று, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக 18ம் தேதி உண்ணாவிரதம் - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அறிவிப்பு
x
கடந்த 19 நாட்களாக,  அறவழியில்போராடி வரும் பல லட்சக்கணக்கான விவசாயிகளின்  உணர்வுகளைக் மதிக்காமல் மத்திய அரசு இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விவசாயிகள் போராட்டத்தில் நக்சலைட்டுகள் புகுந்து விட்டதாக மத்திய அமைச்சர்கள் கொச்சை படுத்தி வருவது கண்டிக்க தக்கது என்றும்,மத்திய அமைச்சர்களின் பிற்போக்குத் தனமான இந்த கருத்தை முதலமைச்சர் பழனிச்சாமி கண்டிக்காமல் இருப்பது வேதனையளிப்பதாக கூறியுள்ளனர்.அறவழியில் போராடி வரும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு அளித்தும்,
வரும் 18-ம் தேதி,  சென்னை - வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாநிலைப் போராட்டம்"  நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். இதில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்களும், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்