"வேளாண் சட்டம் - விவசாயிகளுக்கு கிடைத்த சுதந்திரம்" - பிரதமர் மோடி உரை

வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு கிடைத்த சுதந்திரம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
x
பீகாரில் 9 நெடுஞ்சாலை திட்டங்களுக்கு டெல்லியில் இருந்தவாறு, காணொலி மூலமாக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பிகாரில் உள்ள 45 ஆயிரத்து 945 கிராமங்களும் கண்ணாடி இழை வழி இணைய சேவை மூலம் இணைக்கப்படும் வகையில், கண்ணாடி இழை வழி சேவையையும் அவர் துவக்கி வைத்தார்.அப்போது பேசிய அவர், பீகாரின் வளர்ச்சி பயணத்தில் இன்று மற்றொரு முக்கியமான நாள் என்றார். இணைய பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், இப்போது நாட்டின் கிராமங்களில் நல்ல தரமான, அதிவேக இணையம் இருப்பது அவசியம் என்று தெரிவித்த அவர், அரசின் முயற்சியால் ஏற்கனவே ஆப்டிகல் ஃபைபர்  நாட்டில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பஞ்சாயத்துக்களை எட்டியுள்ளது என்றார். கடந்த 6 ஆண்டுகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுவான சேவை மையங்களும் ஆன்லைனில் சேர்க்கப்பட்டுள்ளன என்று கூறிய அவர், நாட்டின் ஒவ்வொரு கிராமத்திற்கும் இந்த இணைப்பை விரிவுபடுத்தும் குறிக்கோளுடன் நாடு முன்னேறி வருகிறது என்றும் தெரிவித்தார். நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டம், விவசாயிகளுக்கு மிகுந்த பயனுள்ளது எனவும், இது அவர்களுக்கு கிடைத்த சுதந்திரம் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்