சுஷ்மா சுவராஜ் முதலாம் ஆண்டு நினைவு தினம்

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, பா.ஜ.க. மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், அவரது சிறப்புகளை பதிவிட்டு வருகின்றனர்.
சுஷ்மா சுவராஜ் முதலாம் ஆண்டு நினைவு தினம்
x
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, பா.ஜ.க. மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள்,  அவரது சிறப்புகளை பதிவிட்டு வருகின்றனர். 

எப்போது ஒரு உத்வேகத்தை தருபவர் சுஷ்மா சுவராஜ் என்றும், முன்பு எப்போதையும் விட அவரை இன்று  அன்பாக நினைவு கூறுங்கள் என்றும் மத்திய அமைச்சர் ஜெயசங்கர் பதிவிட்டுள்ளார். 

இதேபோன்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தமது பதிவில், சுஷ்மா சுவராஜ், மிகச்சிறந்த சொற்பொழிவாளர் என்றும், அவர் எப்போதும் மனதில் இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார். 

அனைவராலும் போற்றப்பட்ட ஒரு புகழ்பெற்ற தலைவர் சுஷ்மா என்றும், அவருடைய கொள்கைகளும் நம்பிக்கைகளும் தொடர்ந்து நமக்கு வழிகாட்டும் என்றும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்