மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
x
மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனையில் பேரில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக சமூகவலைதள பக்கத்தில் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மத்திய அமைச்சர் அமித்ஷா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மற்றொரு மத்திய அமைச்சரான தர்மேந்திர பிரதானுக்கும் தொற்று உறுதியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்