"வானத்தில் மீண்டும் உயரப் பறக்கும் இந்தியர்கள்!" - விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் கருத்து

கொரோனா ஊரடங்கு உத்தரவு தளர்வால், 63 நாட்களுக்கு பின்னர் நாட்டில் மீண்டும் உள்ளாட்டு விமான சேவை தொடங்கி உள்ளது.
வானத்தில் மீண்டும் உயரப் பறக்கும் இந்தியர்கள்! - விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் கருத்து
x
கொரோனா ஊரடங்கு உத்தரவு தளர்வால், 63 நாட்களுக்கு பின்னர்  நாட்டில் மீண்டும் உள்ளாட்டு விமான சேவை  தொடங்கி உள்ளது. வழக்கம் போல விமான நிலைய ஓடு பாதையில் விமானங்கள் தரையிறங்குவதும், மேலெழும் காட்சிகளை பார்க்க முடிகிறது. 2 மாநிலங்களை தவிர்த்து பிற மாநிலங்கள் அனைத்தும் உள்நாட்டு விமான சேவையை தொடங்கிய நிலையில், மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது வலைதளப் பக்கத்தில், "வானில் மீண்டும் உயரப் பறக்கும் இந்தியர்கள்! " என பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார். வான்வெளி பாதை மும்முரமாகியுள்ள அழகான நேரலை காட்சிகளை 'ஃபிளைட் ரேடார் 24' செயலி படம் பிடித்துள்ளது எனவும் அமைச்சர் பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்