புலம் பெயர் தொழிலாளர்களை அழைத்து வரும் விவகாரம்: மம்தா பானர்ஜி - பியூஸ் கோயல் இடையே வார்த்தை போர்

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவது தொடர்பான ஏற்பாடுகள் குறித்து, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது.
புலம் பெயர் தொழிலாளர்களை அழைத்து வரும் விவகாரம்: மம்தா பானர்ஜி - பியூஸ் கோயல் இடையே வார்த்தை போர்
x
பிறமாநிலங்களில் உள்ள மேற்கு வங்கத்தை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர் மற்றும் அவர்களது குடும்பத்தினரை அழைத்து வருவதில்  மம்தா அரசு மெத்தனம் காட்டி வருவதாக பா.ஜ.க. குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் அடுத்த ஒரு மாதத்தில் 105 சார்மிக் ரயில்கள் இயக்கப்படும் என மம்தா நேற்று தெரிவித்தார். உடனடியாக மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் , ஒரு நாளைக்கு 105 ரயில்கள் தேவைப்படும் என்று பதில் பதிவு வெளியிட்டுள்ளார். மம்தா அரசு கூடுதல் ரயில்களை இயக்காவிட்டால் மேற்குவங்கத்தை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர் நிலை மோசமானதாக அமையும் என்றும் பியூஸ்கோயல் பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்