தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கும் மேற்குவங்க அரசு - முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அமித்ஷா கண்டனம்

மேற்குவங்க அரசு தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கும் மேற்குவங்க அரசு - முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அமித்ஷா கண்டனம்
x
புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலமான மேற்கு வங்கத்திற்கு அழைத்து செல்ல அம்மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும், ரயில்களை அனுமதிக்கவில்லை என்றும்,  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சென்ற ரயிலை மேற்கு வங்கத்திற்குள் அனுமதிக்கு மாநில அரசு அனுமதி தர மறு​ப்பதற்கு அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார். இது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மேற்கு வங்க மாநில அரசு  இழைக்கும் அநீதி என்றும் அமித்ஷா சாடியுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்