முதலமைச்சராக நீடிப்பாரா, உத்தவ் தாக்கரே? - மே 28ஆம் தேதியோடு 6 மாத கெடு நிறைவு//

எம்.எல்.ஏ.வாகவோ, எம்.எல்.சியாகவோ இல்லாமல் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக இருக்கும் உத்தவ் தாக்கரேவின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சராக நீடிப்பாரா, உத்தவ் தாக்கரே? - மே 28ஆம் தேதியோடு 6 மாத கெடு நிறைவு//
x
மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் தேதி காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் சிவசேனாவின் தலைவர் உத்தர் தாக்கரே முதல்வரானார். அப்போது அவர் எம்.எல்.ஏ.வாகவோ எம்.எல்.சி.யாகவோ இல்லை. ஆகவே அவர் தனது முதலமைச்சர் பதவியை காப்பாற்றி கொள்ள 6 மாதத்திற்குள், அதாவது அடுத்த மாதம் 28-ஆம் தேதிக்குள் எம்.எல்.சி. அல்லது எம்.எல்.ஏ. ஆக வேண்டும்.

கடந்த 24ஆம் தேதி  நடக்க இருந்த எம்.எல்.சி. தேர்தல் மூலம் தனது முதலமைச்சர் பதவியை காப்பாற்றிக் கொள்ளலாம் என உத்தவ் தாக்கரே கருதி இருந்த நிலையில், கொரோனா காரணமாக அந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஆளுநர் ஒதுக்கீட்டின் கீழ் காலியாக இருக்கும் 2 எம்.எல்.சி. பதவிகளில் ஒன்றில் உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சி.யாக நியமிக்குமாறு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரிக்கு மகாராஷ்டிர மாநில அமைச்சரவை பரிந்துரை செய்தது. ஆனால் உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சி.யாக நியமிக்காமல் ஆளுநர் தொடர்ந்து அமைதி காத்து வருவது சிவசேனா தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்