ம.பி. சபாநாயகரை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் - காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் ஒப்படைப்பு

மத்திய பிரதேச சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான கோபால் பார்கவா, நரோட்டம் மிஷ்ரா மற்றும் பாஜக தலைவர்கள், அம்மாநில சபாநாயகரை சந்தித்தனர்.
ம.பி. சபாநாயகரை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் - காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் ஒப்படைப்பு
x
மத்திய பிரதேச சட்டமன்ற  எதிர்க்கட்சி தலைவரான கோபால் பார்கவா, நரோட்டம் மிஷ்ரா  மற்றும் பாஜக தலைவர்கள், அம்மாநில சபாநாயகரை சந்தித்தனர். அப்போது,19 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதத்தை அளித்து, அது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். 
இதையடுத்து, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் என்.பி.பிரஜாபதி தெரிவித்துள்ளார். இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய ஜோதிர் ஆதித்யா சிந்தியா, ஓரிரு நாளில் பாஜகவில் முறைப்படி இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்