3வது நாளாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு - எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் முடக்கம்

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மாநிலங்களவை 3-வது நாளாக முடங்கியுள்ளது.
3வது நாளாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு - எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் முடக்கம்
x
நாடாளுமன்ற மக்களவை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தபோது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் டெல்லி வன்முறை குறித்து உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதில் அமளி ஏற்பட்டு நாள் முழுவதும் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. 2-வது நாளான நேற்றும் இரண்டு அவைகளிலும் டெல்லி வன்முறை குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி தொடர் அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது. 
இந்த நிலையில், இன்று 3-வது நாளான இன்றும் பாராளுமன்ற இரு அவைகளிலும்  எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. தொடர் அமளி காரணமாக  மாநிலங்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்