டெல்லி வன்முறை குறித்து விவாதம் நடத்த கோரிக்கை - அடுத்தடுத்து தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டமக்களவை

டெல்லி வன்முறை தொடர்பாக மக்களவையில் அமளி நீடித்ததால் நாளை வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
டெல்லி வன்முறை குறித்து விவாதம் நடத்த கோரிக்கை - அடுத்தடுத்து தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டமக்களவை
x
மக்களவை காலை கூடியதும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒன்று சேர்ந்து, கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க கோரி முழக்கங்களை எழுப்பினர். திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, டெல்லி வன்முறை குறித்து அவையில் ஒரு நாளாவது, விவாதம் நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதனை தொடர்ந்து, அவையில் கூச்சல், குழப்பம் நிலவியதால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அவை கூடிய போதும், அமளி நீடித்ததால், பிற்பகல் 2 மணி வரையிலும் அதன்பிறகு, நாளை வரையும் மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்